மைசூரு மகாராஜா நடத்திய உள்ளாட்சித் தேர்தல்

மைசூரு மகாராஜா நடத்திய உள்ளாட்சித் தேர்தல்
Updated on
1 min read

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மாண்டேகு- செம்ஸ்போர்டு கொண்டுவந்த அரசியல் சீர்திருத்தங்களுக்கு முன்பே தேர்தலில் வாக்களிக்கும் முறை வழக்கத்துக்கு வந்துவிட்டது.

நாட்டில் உள்ள அனைத்து அரசு சமஸ்தானங்களும் நகரசபைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று  பிரிட்டிஷ் அரசு 1861-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதன்படி, 1862-ல் ஜுலை 8 அன்று மைசூரு நகராட்சி செயல்பாட்டுக்கு வந்தது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் மைசூரு அரசர் சாமராஜ உடையார் மனதில் புதிய திட்டம் ஒன்று உருவானது.

அதன்படி, நகராட்சிக்குத் தானே உறுப்பினர்களை நியமனம் செய்வதற்குப் பதிலாக நகரின் மதிப்புமிக்க பிரமுகர்கள் மூலமாக நகராட்சி உறுப்பினர்களை நியமனம் செய்யலாமே என்று யோசித்தார். மைசூரு நகராட்சி நிர்வாகப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் மைசூரு நகரை, லஸ்கர், மண்டி, தேவராஜா, சாமராஜா, கிருஷ்ணராஜா, போர்ட் மற்றும் நஜர்பாத் என்று 7 வார்டுகளாகப் பிரித்து 1892 செப்டம்பரில் முதல் தேர்தலை மைசூரில் நடத்தினார்.

ஆனால்,  அத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 250 மட்டுமே. இந்த வாக்காளர்களில் மைசூரு மகாராஜா, மைசூரு மகாராஜா கல்லூரி முதல்வர், மரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர். வரி செலுத்துபவர்கள் சங்கத் தலைவர், அரண்மனையில் குடியிருப்பவர்கள், அதிகாரிகள்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் சமுதாயத்தில் மதிப்புமிக்க பிரமுகர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in