

உத்தர பிரதேசத்தில், ஏழே மாதங்களில் 1.41 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதாக அம்மாநில அரசு கூறிக்கொள்ளும் நிலையில், வேலை ஆரம்பிக்காத கிராமங்களில்கூடக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், அறைகுறையாகக் கட்டிடங்கள் எழுப்பிவிட்டு வேலை முடிந்ததாகவும் அரசு கணக்குக் காட்டுகிறது என ஆதங்கப்படுகிறார்கள் பொதுமக்கள்.
அரசின் கணக்குப்படியே பார்த்தாலும், ஒவ்வொரு நாளும் 67 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு 47 கழிப்பறைகள். எதிர்க்கட்சிகள் இதைக் கையிலெடுத்து விமர்சிக்கின்றன.