

எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக் குற ஒரு ஸ்கூல் பையன்தான் ‘2 மினிட்ஸ் ஒன்லி’ தொடரின் இந்த வார ஹீரோ. 11-ம் வகுப்பு படிக்கிற அவனைச் சமீபத்தில் தான் சந்தித்தேன்.
வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில பேசும்போது, ‘‘டிசைன் டிசைனா என்னைச் சுத்தியே வர் றானுகளே?’ன்னு பேசுவார். அந்த மாதிரிதான் டிசைன் டிசைனான ஆட்களை நானும் அப்பப்போ பார்த்துட்டு வர்றேன். அப்படிப்பட்ட மனிதர்களில், 11-ம் வகுப்பு படிக்கிற இந்த பையன் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தினான்.
சனி, ஞாயிறுன்னா அவன் எங்க ஏரியாவில் இருக்குற சின்ன கிர வுண்ட்ல கிரிக்கெட், ஃபுட்பால்னு ஏதாவது ஒண்ணு விளை யாடிட்டிருப்பான்.
அன்னைக்கு சனிக்கிழமை. மதி யம் 2.30 மணி இருக்கும். கிரிக் கெட் ஆடிட்டிருந்தான். நான் கிட்டப்போய், ‘‘டேய் தம்பி. நானும் விளையாட வர்றேன்’’னு சொன் னேன். அதுக்கு அவன், ‘‘சின்ன பசங்களா விளையாடுறோம். உங் களை எப்படிண்ணா சேர்த்துக் குறது?’’ன்னு கேட்டான். அதுக்கு நான், ‘‘டேய் எனக்கும் விளை யாடத் தெரியாது’’ன்னு சொன் னேன். திரும்பவும் அவன், ‘‘இல் லண்ணா. நீங்க பெரிய பசங் களோட சேர்ந்து விளையா டுங்க’’ன்னு சொன்னான். ரொம்ப நேரம் பேசி கடைசியில ஒருவழியா அவங்க விளையாட்டு டீம்ல இடம்பிடிச்சேன். அப்படியே 2 மணி நேரம் விளையாடிட்டிருந்தோம்.
மாலை சுமார் 4.30 மணி இருக்கும். அந்த பையன் கிட்ட வந்து, ‘‘ஒரு வேலை இருக்கு, நான் கிளம்புறேன்’’னு சொல்லிட்டு ஓடிட்டான்.
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. அதே மாதிரி 2.30 மணிக்கு கூடினோம். மாலை 4.30 மணி ஆனதும், ‘‘அண்ணா கிளம்பு றேன்’’னு வந்தான். ‘‘என்னடா தம்பி. 4.30 ஆனதும் கரெக்ட்டா கிளம்பிடறியே.. சனி, ஞாயிறுல வீக்-எண்ட் கிளாஸ் ஏதாவது போறியா?’’ன்னு கேட்டேன்.
‘‘இல்லண்ணா? எனக்கு ஒரு ஹாபி இருக்கு’’ன்னான். ‘என்ன சொல்லப் போறான்.. பெரும் பாலும் எல்லோரும் சொல்ற மாதிரியே ‘லிசனிங் மியூசிக், ரீடிங் புக்ஸ்’னு சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். ஆனா, அன் னைக்கு அவன் சொன்னது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது.
எங்க ஏரியாவுல நான் வசிக்கிற பகுதியில 180 வீடுகள் இருக்கு. அதுல பல வீடுகள்ல வயதான தாத்தா, பாட்டி இருக்காங்க. வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகன், மகளைப் பிரிஞ்சு தனியா இருக்கிற அப்பா, அம்மாவும் பலர் இருக்காங்க. மதியம் விளையாட வர்ற அந்த 11-ம் வகுப்பு படிக்கிற பையன், மாலை 4.30 மணி வரை விளையாடினதுக்கு அப்புறம், இதுபோல இருக்கிற தாத்தா, பாட்டிங்க வீட்டுக்கு போய்டறான். அங்கு போனதும், அவங்க பேசணும்னு விரும்புறவங்களுக்கு ‘வாட்ஸ்அப்’ல பேச, ஃபைல்களை அனுப்ப உதவுவது, மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் கணக்கு தொடங்கித் தருவது, அடிப்படை கம்ப்யூட்டர் விஷயங்களைச் சொல்லித் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறான்.
ஒவ்வொரு சனி, ஞாயிறும் தவறாமல் இதைச் செய்துட்டு வர்றான். இதுல அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!
இப்போ எழுதறதுக்கு முன் னாடி, இதை ரேடியோ விலும் பேசி யிருக்கேன். இந்த விஷயத்தைப் பகிர்ந்த ரெண்டு, மூணு நாட்களிலேயே சுமார் ஏழெட்டு பேர், அந்தப் பையன் செய்துட்டு வர்ற வேலையை செய்ய ஆரம்பிச்சாங்க.
தாத்தா, பாட்டிக்கு..
இப்போ இதைப் படிக்கும் போதும் கண்டிப்பா சிலர் இதை ஃபாலோ பண்ண ஆரம்பிப்பாங்க. அது போல பண்ணலாம்னு உங் களுக்கு ஐடியா இருந்தாலும், வெளியில இருக்கிறவங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு முன்னாடி உங்க வீட்ல இருக்குற அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிக்கு கற்றுக்கொடுங்க.
இதோ அடுத்த வாரம் தீபாவளி வருது. நிறைய பேருக்கு முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம்ல எல்லாம் வாழ்த்து செய்தி அனுப்புவோம். இந்த தீபாவளி பண்டிகை போலவே ஆண்டு முழுக்க நிறைய திருவிழா, பண்டிகைங்க வரும். குறிப்பா, ‘அன்னையர் தினம்’ போன்ற நாட்களில், ‘என் அம்மா மாதிரி உலகில் யாருமே இல்லை!’ என்றெல்லாம் கவிதை எழுதி அனுப்புவோம். ஆனா, கண் முன்னாடி இருக்குற அம்மாவுக்கு ஒரு வாழ்த்து சொல்ல மாட்டோம். ஊருக்குதான் உபதேசம் என்ற போக்கு இங்கு இப்போதும் இருக்கத்தான் செய்யுது.
வலைதள மகிழ்ச்சி
அதை மாற்றுங்க. உங்க அம்மா, அப்பாவுக்கும் வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்ப கற்றுக் கொடுங்க. முகநூலில் அவங் களுக்கு ஒரு கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அவர்களுக்கு நெருக்க மாக உள்ளவர்களை அதுவழியே இணைக்க முயற்சி செய்யுங்க.
‘‘வீட்ல இருக்குற பெரியவங் களுக்கு எதுக்கு முகநூல், வாட்ஸ்அப்?’’ என்று தயவுசெய்து கேட்காதீங்க. வலைதளங்களில் பகிரும் மகிழ்ச்சியை அவங்களும் அனுபவிக்க வேண்டாமா!
மெசேஜ் தரும் சந்தோஷம்
நினைச்சுப் பாருங்க.. வெளியில பரபரப்பா சுத்திட்டிருக்கிற நம்மை, ‘எப்போ சாப்பிட வர்றே?’ன்னு கேட்டு, அம்மா வாட்ஸ்அப்ல ஒரு மெசேஜ் அனுப்பும்போது, ரெண்டு பேருக்கும் அது தருகிற சந்தோஷம் இருக்கே. அதைவிட என்ன வேண்டும்!
அதுவும், வெளியூரில், வெளி நாட்டில் இருக்கிற மகன், மகளை இதுபோன்ற தொழில்நுட்பம் வழியே நேரில் பார்ப்பதுபோல பார்த்து, பேசுவதால் பெரியவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதனால்தான் சொல் கிறேன்... மற்றவர்களோடு வாட்ஸ் அப், முகநூல் போன்ற தளங் களில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நடுவில், நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுக்கும் நாம் பகிரவேண்டும்.
மறுபடி சந்திப்போம். அனை வருக்கும் உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
- நிமிடங்கள் ஓடும்.