

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்க நலனே முதன்மையானது’ என்று தொடர்ந்து முழங்கிவருகிறார். அவரது இந்தக் கொள்கை அமெரிக்க மேல்தட்டுப் பிரிவினர் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது; உலகின் தெற்கு நாடுகளில் பொருளாதாரச் சரிவையும் ஏற்படுத்துகிறது.
தெற்கு நாடுகள் ஏற்கெனவே காலனிய ஒடுக்குமுறையாலும், ‘வல்லான் வகுத்ததே சட்டம்’ என்கிற புவி அரசியலாலும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், தெற்குலக நாடுகளின் இன்றைய நிலை குறித்துப் பேசுவது அவசியம்.