

இலக்கியத்திற்காக வழங்கப்படும் முதன்மை விருதுகளான நோபல் பரிசு, புக்கர் பரிசு இரண்டையும் ஒருசேர பெற்றுள்ள ஹங்கேரி, ஒட்டுமொத்த இலக்கிய உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற லாஸ்லோ கிராஸ்ன ஹோர்கெ ஹங்கேரியைச் சேர்ந்தவர். புக்கர் பரிசு பெற்ற டேவிட் சாலே கனடா நாட்டில் பிறந்திருந்தாலும் பூர்வீகம் ஹங்கேரிதான். அந்த வகையில் அடுத்தடுத்த விருது அறிவிப்புகளால் ஹங்கேரி இரட்டை மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.