

மூன்றாம் வகுப்பில் இருந்தே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த பாடங்கள் மத்திய அரசுப் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் இது தொடர்பாகப் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுக் கல்லூரிகளில் சேர இருப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆம்! எந்த வகையிலான படிப்புகள், ஏஐ காரணமாகப் பெரிதும் மாற்றம் காணும் என்பதையும், எத்தகைய படிப்புகள் - வருங்காலப் பணிகள் மதிப்பிழக்கும் என்பதையும் கவனிக்க வேண்டிய நேரம் இது.
வழக்கொழியும் நுட்பங்கள்: ஓர் ஆய்வின்படி அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) நிபுணர்களில், ஏஐ சாதனங்கள் தங்கள் அன்றாடத் திறன்களில் பலவற்றைப் பயன்பாடின்றி ஆக்கிவிடும் என்று கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 91 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.