

எனது சுய சம்பாத்தியத்தில் தேடிய சொத்து முழுவதையும், எனது ஒரே மகனின் மீது இருந்த பாசம் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவன் பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து வைத்துவிட்டேன். ஆனால், இப்போது எனது மகன் எனக்கு சாப்பாடு தரக்கூட மறுத்துவிட்டான். என்னை வீட்டைவிட்டும் வெளியே அனுப்பி விட்டான். என்னைப் பத்திரமாகப் பராமரிக்காமல் வீட்டைவிட்டு வெளியேற்றிய எனது மகன் எனது சொத்தை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை. எனது சொத்தை நான் திரும்பவும் மீட்க முடியுமா? - எம்.சபாநாயகம், சென்னை
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையெனில், நிச்சயமாக உங்கள் சொத்தை உங்களால் மீட்க முடியும். நீங்கள் விரும்பி தான செட்டில்மென்ட் செய்து வைத்த சொத்தின் மீது உரிமை கொண்டாட உங்கள் மகனுக்கு உரிமை உள்ளது. ஆனால், சொத்தை வழங்கிய பெற்றோரையே பராமரிக்கத் தவறினால், இது பற்றி, 2007ஆம் ஆண்டின் பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின்படி நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம்.