கலை அமைதி | கதை அறியும் கலை

கலை அமைதி | கதை அறியும் கலை
Updated on
2 min read

கு.ப.ரா. ‘விடியுமா’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். “சிவராமையர் டேஞ்சரஸ்” என்று தந்தி வருகிறது. அக்காளும் தம்பியும் உடனே இரவிலேயே சென்னைக்குப் புறப்படுகின்றனர். செல்லும்முன் குஞ்சம்மாளின் தாய் எதிர்கொண்ட நல்நிமித்த ஆறுதல்கள், பயணத்திற்கு வேண்டிய பொருட்கள், நோம்பிக்கு கும்பகோணம் வந்த குஞ்சம்மாள் மனத்தத்தளிப்புடன் எதிர்கொள்கிற விதம், அத்திம்பேர் அக்காளை வரவழைக்கச் செய்திருக்கும் குறுக்குவழியாக இருக்குமோ என்று தோன்றும் சமாதானங்கள், அக்காவின் முகத்தில் தோன்றும் புதுப்பொலிவு தரும் நம்பிக்கை, எழும்பூரில் இறங்கும்போது எதிர்கொண்டு நின்றாலும் நிற்பார் என்கிற நினைப்பில் தவிப்படங்கி மனங்கொள்ளும் ஆறுதல் என இருவரது மனநிலைகளை உரையாடல்களிலும் மன ஓட்டங்களிலும் கு.ப.ரா. விவரிக்கிறார்.

எழுத்​தாளர், கலைஞ​ராக மிளிர்​வது அவர் உரு​வாக்​கும் ஆக்​கத்​தின் பரிபூரணத்​தன்​மை​யால் விளைவது. மனதின் உண்மை ஒளியைக் காண முயல்பவரால் மட்​டுமே அடைய முடிவது. சிவ​ராமையர்உயிருடன் இருக்க வேண்​டும் என்று எதிர்​பார்த்து மனம் ததும்​பு​கிறது. அவர் காசநோய் காரண​மாக மருத்​து​வம் பார்த்துவரு​வது சொல்​லப்​படு​கிறது. தன் மங்​கலத்​தன்மை போய்​விடக்​கூ​டாது என்ற தவிப்​பும் தொடர்ந்​தது. அந்த விடிவை நோக்​கித்​தான் இந்​தப் பயணம் என்ற எண்​ணம் குஞ்​சம்​மாளுக்​குத் தோன்​றுகிறது. இப்​படி ஓடும் எண்​ணத்திலிருந்து வேறொரு கதவு திறக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in