சிறப்புக் கட்டுரைகள்
‘வந்தே மாதரம்’: சட்டமன்றத்தில் ஒரு விவாதம்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை ரவீந்திரநாத் தாகூர் பாடியதன் 150ஆம் ஆண்டுவிழாவை நாடு முழுவதும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர உணர்வை ஊட்டி வளர்த்த பாடல்களில் ஒன்றான இது, தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸின் சட்டமன்றப் பிரவேசத்துக்குப் பிறகு, 1937இல் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் இறை வணக்கமாக ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டிருப்பதைச் சட்டமன்றக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அப்பாடலை இறை வணக்கமாகப் பாடுவதற்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்திருப்பதையும்கூட அறிந்துகொள்ள இயலுகிறது.
