

எல்லா இயக்கங்களுக்கும் அரசுகளுக்கும் சாதனைப் பட்டியல்கள் உண்டு. ஆனால், அந்தச் சாதனைகளால் சமூகத்தின் எந்தப் பிரிவினர் பலன்பெற்றார்கள் என்பதைக் கொண்டுதான், அது எத்தகைய அரசு என்பதை நாம் வரையறுக்க முடியும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்திருக்கும் தமிழ்நாடும் கேரளமும் சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடிகோலுவதிலும் தனித்துவமான பாதையில் பீடுநடை போடும் இரண்டு மாநிலங்கள்.
2025ஆம் ஆண்டில் தீவிர வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக கேரள அரசு பெருமையோடு அறிவித்திருப்பதும், திராவிட மாடல் ஆட்சியின்கீழ் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியுடன் முன்னேறிவருவதும் சுட்டுவது ஒன்றைத்தான்.