

ரஷ்யாவில் ‘அக்டோபர் சோஷலிசப் புரட்சி’ லெனின் தலைமையில் 1917ஆம் ஆண்டு வெற்றிபெற்றது. அந்த ஆண்டு நவம்பர் 7ஆம் நாள், அதாவது ஜூலியன் நாள்காட்டியின்படி அக்டோபர் 25ஆம் நாள் காலை போல்ஷ்விக் புரட்சி வென்றது. அன்று காலை 10 மணிக்கு, ‘ரஷ்யாவின் குடிமக்களுக்கு!’ என லெனின் எழுதிய வேண்டுகோள் அந்த மகத்தான வெற்றியை அறிவித்தது.
‘இடைக்கால அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அரசு அதிகாரம் தொழிலாளர், படைவீரர்கள் பிரதிநிதிகளின் பெட்ரோகிராடு சோவியத்தின் அமைப்பான புரட்சிகர–ராணுவ கமிட்டியின் கரங்களுக்கு மாற்றப்பட்டது...’ என்கிற அந்த அறிவிப்பு, மனிதகுல வரலாற்றில் ஒரு திருப்புமுனையைப் பறைசாற்றியது.