

தமிழகம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், 2031-32ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், பயனுள்ள பரவலாக்கப்பட்ட நிர்வாகம் முதல் பல்வேறு முக்கியத் துறைகளின் வளர்ச்சி சார்ந்த சவால்களில் கவனம் செலுத்துவது, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்திசெய்வது வரை பல துறைகளில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.