

சென்னை மாநகராட்சி, சென்னை சமூகப் பணிக் கல்லூரி இணைந்து நடத்திய ‘கண்ணியத்துக்கான புள்ளிவிவரம்’ (Data for Dignity) என்னும் சென்னை நகரம் சார்ந்த வீடில்லா மக்களுக்கான கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், சென்னை முழுவதும் 2,837 இடங்களில் 13,529 வீடில்லா நபர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்த அறிக்கையில் வீடமைப்புக் கொள்கைகளை வலுப்படுத்த, சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த, கட்டமைப்புசார் பாகுபாடுகளை எதிர்கொள்ள, சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கப் பல முக்கியத் திட்டங்கள் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, மே 29 அன்று தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், ஏழு துறை அதிகாரிகளிடம் இந்த அறிக்கை வழங்கப்பட்டது.