

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2023ஆம் ஆண்டறிக்கையின் தரவுகள் பெரிதும் அதிர்ச்சி தருகின்றன. தமிழகத்தில் மனிதக் கடத்தல் வழக்குகள் ஒன்றுகூடப் பதியப்படவில்லை என்றே அறிக்கை கூறுகிறது. அப்படியென்றால், தமிழகம் மனிதக் கடத்தலே நிகழாத மாநிலமாக உள்ளதா? உண்மை நிலவரம் என்ன?
திட்டமிடப்பட்ட குற்றம்: கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்களில் பலரிடம் பொய்யான வாக்குறுதி கொடுக்கப்பட்டு வேலைக்காக அழைத்து வரப்படுகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்படும் பல குழந்தைகள் தொடர்வண்டி நிலையங்களில் மீட்கப்பட்டாலும், வழக்குகள் எதுவும் பதியப்படுவதில்லை.