

இணைய அகராதிகள் புதிதல்ல. தமிழ் - ஆங்கிலத்துக்கான 72 அகராதிகளை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் அகராதியாக இயங்குவது ‘தமிழ்ப்பேழை’ என்கிற www.mydictionary.in இணையத்தளத்தின் சிறப்பு. இதில் ஒரு சொல்லைத் தட்டச்சு செய்தால், அனைத்து அகராதிகளில் இருந்தும் அந்தச் சொல்லுக்கான பொருள் கிடைக்கும். தமிழில் கலைச்சொல் தேடுவோர்க்கு அடிப்படையான புரிதலை ‘தமிழ்ப்பேழை’ வழங்குகிறது. 150க்கும் மேற்பட்ட துறைகளுக்கான 11 லட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் இதில் உள்ளன.
பழமொழி, விடுகதை, இதழ்கள், திரைப்படங்கள் போன்ற தலைப்புகள் மூலமாகவும் சொல்லைத் தேடலாம். இதை உருவாக்கி 10 ஆண்டுகளாக நடத்திவருபவர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல்-மக்கள் தொடர்பியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், தனது பல்வேறு பணிகளுக்காகத் தமிழக அரசின் ‘தூய தமிழ்ப் பற்றாளர்’ விருது உள்படப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். இவர் சில அகராதி நூல்களின் ஆசிரியரும்கூட. ‘தமிழ்ப்பேழை’ இணையத்தளத்தில் இருக்கும் பல நூல்களை சேலத்தில் மக்களின் நேரடிப் பார்வைக்கு வைத்திருக்கிறார். அவருடைய நேர்காணல்: