

கடந்த சில ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தைப் பற்றி பல்வேறு அறிக்கைகள், எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எனினும், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலோ கரிம உமிழ்வுகளிலோ பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம்.
புவியின் சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸை எட்டக் கூடாது என்கிற இலக்குடன் பாரிஸ் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், உமிழ்வுகள் இப்படியே தொடரும்பட்சத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிச்சயமாக எல்லையைக் கடந்துவிடும் என்று அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள்.