

சுயமாகக் கற்றுத் தேர்ந்தவர். வாழ்ந்த காலத்தில் அவரை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பல இடங்களுக்குச் செல்ல வேண்டும், பலவிதமான பண்பாடுகளை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்றெல்லாம் ஏங்கியபோதும், இத்தாலியைக் கடந்து எங்கும் அவரால் நகர முடியவில்லை.
நேப்பிள்ஸில் பிறந்து, அங்கேயே சலசலப்பின்றி இறந்துபோனார். 19ஆம் நூற்றாண்டில் அவர் எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான் அவர் சிந்தனையின் வீச்சை உலகம் அறிந்துகொண்டது. இன்று, யாம்படிஸ்டா வீகோ (Giambattista Vico, 1668-1744) ஒரு முக்கியச் சிந்தனையாளராகவும் முதல் வரலாற்றுத் தத்துவவியலாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.