

மலையாளத்தில் ‘ஆராச்சார்’ என்றால் ‘தூக்குப் போடுகிறவன்’ என்று பொருள். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் சமஸ்தானமாக இருந்த திருவிதாங்கூரில், தூக்கில் இடும் பணியைச் செய்தவர்களுக்கு இனாமாக வேளாண்மை நிலம் வழங்கப்பட்டது. இதனை ‘ஆராச்சார் நிலம்’ என்றே அழைத்தார்கள்.
கொல்கத்தாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதை பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து, மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா எழுதிய ‘ஆராச்சார்’ நாவல் சாகித்ய அகாதமி பரிசினைப் பெற்றுள்ளது. இதனை மோ.செந்தில்குமார் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். கொல்கத்தாவின் வரலாற்றையும் முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் விரிவாக சித்தரித்துள்ள இந்த நாவல், சேதனா கிருத்தா மல்லிக் என்ற பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது.