

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. “அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் தொடுத்து, அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் தலைமையிலான வெனிசுவேலாவை விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்த மரியாவுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
ஒன்பது போர்களை நிறுத்தியதற்காகத் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனக் கூறிவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தப் பரிசு வழங்கப்படாவிட்டாலும், இந்தப் பரிசை டிரம்ப்புக்குச் சமர்ப்பிப்பதாக மரியா அறிவித்தது இன்னொரு சர்ச்சைக்கு வழிவகுத்தது.