

செப்டம்பர் 19ஆம் நாள் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான செய்திக்கு ஊடகங்கள் பலவாறாகத் தலைப்பிட்டன. அவற்றுள் சில, ‘இந்தியர்கள் மீது இறங்கிய இடி’, ‘அடைக்கப்படுகிறது அமெரிக்கக் கதவு’, ‘டிரம்ப் வீசிய அணுகுண்டு’ என்கிற ரீதியில் இருந்தன.
குழப்பமும் தெளிவும் ‘ஹெச்1பி’ விசா கட்டணத்தை 2,000 டாலரிலிருந்து ஒரு லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) உயர்த்தினார் டிரம்ப். விண்ணப்பிக்கும்போது மட்டும் செலுத்த வேண்டுமா அல்லது ஆண்டுதோறும் செலுத்த வேண்டுமா என்பது அறிவிப்பில் தெளிவாக இல்லை.