

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள பிரீத்தி சிறுநீரகச் சிறப்புச் சிகிச்சை மருத்துவமனையில், 16 மாதக் குழந்தை அவசரச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குச் சிறுநீரை வடிக்கும் ‘சிறுநீர் வடிகுழாய்’ (Ureter) பிறவியிலேயே அடைத்துக்கொண்டிருந்தது. சிறுநீர் பிரிய வழியில்லாமல் சிறுநீரகம் வீங்கியிருந்தது.
அதனால், அந்தக் குழந்தை ஆபத்தான நிலைமையில் இருந்தது. உடனடியாக அந்த அடைப்பை அகற்ற வேண்டிய கட்டாயச் சூழல். மேலும், மற்றவர்களுக்கு ஏற்படுகிற மாதிரி இல்லாமல் அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்தை ஒட்டிய சில அமைப்புகள் மாறியிருந்தன. ஆகவே, வழக்கமான அறுவைச்சிகிச்சையில் அந்தக் குழந்தையின் சிக்கலைத் தீர்க்க முடியாது; சிகிச்சையில் சில துல்லியங்கள் தேவைப்பட்டன.