

காந்தியைப் பற்றிப் படிப்பது, வரலாற்றைக் கற்பது மட்டுமல்ல; நம் வாழ்கையுடன் ஒரு நெறிமுறை சார்ந்த உரையாடலை நிகழ்த்துவது ஆகும். அவரது உண்மை, அஹிம்சை, சுயக்கட்டுப்பாடு ஆகிய தத்துவங்கள் இன்றும் உலககெங்கும் ஒலிக்கின்றன. காந்தியைப் பற்றிய ஒவ்வொரு நூலும் ஒரு தனிக் கண்ணோட்டத்தை வழங்கினாலும், அனைத்தும் சேர்ந்து மனிதகுலத்துக்கு பெரிய வாழ்வியல் நெறியைத் தருகின்றன. காந்தி எழுதிய சுயசரிதை ‘சத்தியசோதனை’.
இது, அவரை அறிய சிறந்த நூல். தன் தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விவரிக்கிறதது. இதில் காந்தி, தனது வாழ்க்கையை ‘பரிசோதனை’ (Experiments) எனக் குறிப்பிடுகிறார். ‘உண்மை’ (Truth) அவரது தத்துவத்தின் மையமாக இருக்கிறது. சத்தியமே இறைவன் என்று அவர் கருதியதால், இந்த நூல் ஒருவகை உள்ளொளிப் பயணமாகவும், அரசியல் ஆவணமாகவும் கருதப்படுகிறது.