கலைச்சொல்லாக்கத்தின் நுட்பங்கள்

கலைச்சொல்லாக்கத்தின் நுட்பங்கள்

Published on

செப்டம்பர் 11, 2025 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே பாரதி தன் கைப்பட எழுதிய ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அவரே சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை எழுதியிருந்தார். அதில் ‘மைக்ராஸ்கோப்’ என்கிற சொல்லைத் தமிழில் ‘அணு தர்ஷினி’ என்று பாரதி எழுதியிருந்தார்.

கலைச் சொல்லாக்கத்தில் அவரின் மொழி ஆளுமை என்னை வியக்கவைத்தது. ‘மைக்ரோ’ என்கிற ஆங்கில முன்னொட்டுக்குத்தான் தமிழில் எத்தனை முன்னோடிகள் என்று யோசித்துப் பார்த்தேன். ‘மைக்ரோபயாலஜி’, ‘மைக்ராஸ்கோப்’ போன்றவற்றைத் தமிழில் நுண்ணுயிரியியல், நுண்ணோக்கி என்று மொழிபெயர்க்கிறோம். “மைக்ரோ என்டர்பிரைசஸ்” என்பது குறுந்தொழில் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. மொழிபெயர்ப்பில் உள்ள நுட்பங்களைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in