

‘கடவுள் செய்வார் என்கிற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்காதீர்கள். யார் கண்டது; மனிதர்கள் செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் கடவுள் காத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ’ என்கிற வார்த்தைகளைச் சொன்னவர் ஒரு பேரறிஞரோ கற்றறிந்த மேதையோ அல்லர்.
மனித குலத்தில் இப்படியும் ஒரு சாதனையைச் செய்ய இயலுமா என்று பிரமிக்க வைக்கும் சாதனையை 60 ஆண்டுகளுக்கு முன் சாதித்துக் காட்டிய சாமானியரான தசரத் மாஞ்சி இயல்பாகச் சொன்ன வார்த்தைகள்தாம் அவை. ‘மலை மனிதர்’ (Mountain Man) என்று போற்றப்பட்ட தசரத்தின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியப் பாடம்.