

மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றி அ.ராமசாமி, தி.செ.செளரிராஜன் ஆகிய இருவரும் விரிவாக எழுதியுள்ளனர். வேறு சிலரின் கட்டுரைகளும் உள்ளன. ‘இந்து’ ஆங்கில நாளிதழ் கட்டுரையின்படி மகாத்மா தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் 26-10-1896 அன்று வந்தார். கடைசியாக 1946ஆம் ஆண்டிலும், இந்த 50 ஆண்டுகளில் மொத்தம் 12 முறையும் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். சிலர் 26 முறை வந்தார் என்கின்றனர்.
கிராமங்களில் பயணம்: மகாத்மா 1934ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தபோது ஒரு மாதத்தில் 112 கிராமங்களுக்குச் சென்றார். மாட்டு வண்டியிலும்கூட போயிருக்கிறார். அப்போது தமிழ் கிராமங்களில் வழிபாட்டுக்குரிய தலைவர் ஆகிவிட்டார். மகாத்மா பற்றி அன்றைய காலகட்டத்தில் வந்த சிந்து பாடல்கள் அவரை பிரபலம் அடையச் செய்வதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.