

உயிரினமாக இருந்த மனித இனம் உழைக்கத்தக்க மனிதராக, மனிதப் பண்புகளுடன் எப்போது உருவாகி வளர்ச்சி பெற்றதோ அதுதான் கலை உருவான காலம். அன்று மனித இனம் வரைந்ததுதான் முதல் ஓவியம், அன்று குழுவாகக் கூச்சலிட்டுப் ‘பாடியது’தான் முதல் பாட்டு, கூட்டமாக ஆடியதுதான் முதல் நடனம். கலைகளின் பிறப்பிடம் இதுதான். மனிதர்களின் உழைப்புடன் தொடர்புடையவை கலைகள், உழைக்கும் சமூகத்தின் விளைச்சலே கலைகள்.
விடுதலைக்கான குரல்: இதனைத் தத்துவார்த்த அடிப்படையில் புரிந்துகொண்டு, தமிழகத்தில் சேர்ந்திசை என்னும் புதியதொரு வடிவத்தை அறிமுகப்படுத்தியவர்தான் மானாமதுரை பால கிருஷ்ணன் சீனிவாசன் என்கிற எம்.பி.சீனிவாசன். சுருக்கமாக எம்.பி.எஸ். 1925 செப்டம்பர் 19இல் பிறந்தவர்.