

நாடு முழுவதும் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது பெரிய விவாதப் பொருளாக மாறாதது கவலைக்குரியது.
அதேபோல, தமிழ்நாட்டில் ஒரு மாணவர்கூடச் சேராத நிலையில் 208 பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். இதற்கான காரணங்களையும், தடுப்பதற்கான வழிமுறைகளையும் தனிக் கவனத்துடன் ஆராய வேண்டியுள்ளது.