

ஜவுளித் தொழிலுக்கு உதவும் விதமாக டிசம்பர் 31, 2025 வரை பருத்தி இறக்குமதி செய்வதற்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. ஜவுளி ஆலைகளுக்கு மலிவான மூலப்பொருளை வழங்கும் நோக்கத்தை இது கொண்டிருந்தாலும், அக்டோபர் 2023 முதல் பருத்தியின் சந்தை விலை குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) விடத் தொடர்ந்து குறைவாக இருப்பதால், பருத்திச் சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கு விவசாயிகள் போராடிவருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் இறக்குமதி வரியை நீக்குவது ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள சுமார் 130 லட்சம் ஹெக்டேர் பருத்தி பயிரிடுகின்ற 58 லட்சம் விவசாயிகளை மேலும் பாதிக்கும். லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி, ஜவுளி ஆலைகளுக்கு மலிவான விலையில் பருத்தி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமா?