

ஆர். சங்கரநாராணயன் என்ற ஆர்.எஸ். நாராயணன், தமிழ்நாட்டின் வேளாண்மை அறிவு உலககத்தில் நன்கு அறியப்பட்ட ஆளுமை. கடந்த 07-09-2025 அன்று, 87 வயதில் காலமானார். திண்டுக்கல் காந்திகிராமம் அருகில் உள்ள அம்பாத்துறையில் வசித்துவந்தார். மத்திய அரசின் வேளாண்மை பொருளியல் துறையில், சந்தையாக்கப் புலனாய்வுப் பிரிவில் ‘தொழில்நுட்ப எழுத்தர்’ வேலையில் சேர்ந்து, ஆய்வாளர் பதவிவரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்.