

திருவண்ணாமலை கரிக்கலம்பாடி கிராமத்தில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்துக் கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதும், திருப்பூரில் திருமண உறவில் வன்முறைகளை எதிர்கொண்ட இளம் பெண், தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டதும் அண்மைத் துயரங்கள்.
இவை, சமூகத்தில் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கூர்மை அடைந்துவருவதை மட்டுமல்ல, வன்முறைகள் மிகத் தீவிரமாகக் கட்டவிழ்த்துவிடப்படுவதையும், பலர் அதிலிருந்து தப்பித்து வெளியில் வர முடியாத சூழலில் தவிப்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றன.