

நம் கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசத் தந்தை காந்தி. கிராமம் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன வசதிகளுடனான வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் உட்பட - நாம் அனைவரும் கிராமங்களோடு நேரடியாகவோ மறைமுகவோ ஏதோ வகையில் தொடர்பில் இருக்கிறோம்.
இன்றைய காலத்தில் நகர்ப்புறங்களுக்கு இணையாகக் கிராமங்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி பெற்றுத் திகழ வேண்டும். கிராமங்கள் நகர்ப்புறங்களைப் போல் வளர்ச்சி அடைகின்றபோது சமூகரீதியான ஏற்றத்தாழ்வுகள் குறைய வேண்டும் என்பது நம் விருப்பம். ஆனால், பெரும்பாலான கிராமங்கள் இத்தகைய லட்சியப் பார்வைக்கு இடம் கொடுக்கும் வகையில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.