

தமிழக அரசு, மாநிலத்தின் பள்ளி / கல்லூரி மாணவ மாணவியரின் பொது அறிவு, கல்வி, உடல்நலன் ஆகிய மூன்று காரணிகளையும் உள்ளடக்கி அவர்களின் ஒட்டுமொத்தத் திறமைகளையும் வளர்த்து அவர்தம் தன்னம்பிக்கையை மிளிர வைக்கும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த அரசுதான் என்றில்லாமல் எந்த அரசு வந்தாலும் மாற்ற முடியாத - கைவிட முடியாத, மேலும் மிளிர வைத்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியிருக்கும் திட்டங்கள் இவை.
‘நான் முதல்வன்’, பெண் குழந்தைகளைக் காக்கும் ‘இமைகள் திட்டம்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, மாதிரிப் பள்ளிகள், மாணவர்களுக்கான மன நலன், கல்வி வழிகாட்டல், வெற்றிப் பள்ளிகள், கற்றல்திறன் மேம்பாடு, ‘டிஎன் ஸ்பார்க்’ போன்ற திட்டங்கள் முக்கியமானவை. இந்தத் திட்டங்களின் நிறைவேற்றத்தில் பலருடைய பங்களிப்பும் தேவைப்படுகிறது.