

“கவின், மாற்றம் என்றால் என்ன, புரட்சி என்றால் என்ன? என்று கேட்டேன். ஒரு நிலையில் ஏற்படும் மாறுதல்கள் தற்காலிகமாக இருந்தால், அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் மாறுதல்களை உருவாக்கினால், ஏற்கெனவே இருந்த நிலைமைகளைச் சற்று மேம்படுத்துகிற அளவில் மட்டும் இருந்தால், அதை மாற்றம் என்கிறோம். எடுத்துக்காட்டாக, சாதாரண கைபேசியிலிருந்து திறன்பேசிக்கு நாம் மாறுகிறோம்.
அது மாற்றம்... அவ்வளவுதான். ஆனால், கைபேசி என்பதேகூட ஒரு பெரிய மாற்றம்தான். ஆனால், தொலைத்தொடர்புத் துறை உருவானபோது, அது வெறும் மாற்றம் அல்ல, 1876இல் அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தபோது, அது மாற்றமல்ல, புரட்சி. அப்போது நடந்த பல மாற்றங்களினூடாகத்தான் தொலைத்தொடர்புப் புரட்சியே ஏற்பட்டது.”