

‘கந்தன் கருணை’ (1967) படத்துக்காக கண்ணதாசன் பாடல் எழுதிக் கொண்டிருந்த நேரம். இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ஒரு காட்சியைச் சொல்லி பாடல் கேட்டார். “இந்தக் காட்சிக்கு பொருத்தமான ஒரு பாடலை, பக்திப் பாடல் ஒலிநாடா ஒன்றில் கேட்டேன். அதையே பயன்படுத்தலாமே..!” என்று கண்ணதாசன் சொல்ல, அந்தப் பாடலே படத்திலும் இடம்பெற்று, பாராட்டைப் பெற்றது.
‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…’ என்ற பாடலே அது.