

ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவுடன், அண்மையில் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு அறிக்கையின்படி, காசா பகுதியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். பட்டினியும் வறுமையும் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைவால் வாடுகின்றனர்.
பலர் உயிர் வாதையுடன் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அவையும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பட்டினிக்குப் பலியாகியுள்ளனர்.