

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கரோனா வைரஸ் தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்தது. அந்தப் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற உலக விஞ்ஞானிகள் சமூகம் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் அடானியோ டி மணிலா பல்கலைக்கழகமும் (ADMU), சிங்கப்பூரின் டியூக் தேசியப் பல்கலைக்கழகமும் (Duke - NUS) இணைந்து நடத்திய ஆய்வு இதில் முக்கியமானது.
இதில், லாரிக் அமிலமும் (Lauric acid), அதிலிருந்து உருவாகும் மோனோலாரின் (Mono Laurin) என்கின்ற வேதிப்பொருள்களும் வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் தன்மை கொண்டவை என்றும் இந்த வேதிப் பொருட்களை வைத்துத்தான் கோவிட் தொற்றுக்குப் புதிய பரிமாணத்தில் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்கிற முடிவுக்கு வந்தனர்.