

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாட வாழ்வில் புலன்களுக்கு இன்பமளிக்கும், மகிழ்வளிக்கும் எதுவும் அழகானதே. ‘திசை கண்டேன், வான் கண்டேன், உட்புறத்துச் / செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன் யாண்டும் / அசைவனவும் நின்றனவும் கண்டேன் மற்றும் / அழகுதனைக் கண்டேன் நல்லின்பம் கொண்டேன்’ என்கிறது பாரதிதாசன் கவிதை.