

நிலவை வானில் மட்டுமில்லை, குளத்து நீரிலும் பார்க்கலாம் என்கிறது சீனப்பழமொழி. நாவலும் அப்படிப்பட்டதுதான். அது கதை வழியாக வாழ்வின் உண்மைகளை எளிதாகப் பிரதிபலித்து விடுகிறது. புகழ்பெற்ற நாவல்கள், அதன் துவக்க வரிகளிலேயே நம்மை உள்ளே இழுத்துக் கொண்டு விடக்கூடியவை. இதற்குச் சிறந்த உதாரணம், டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’.
மலையாள எழுத்தாளர் பாறப்புறத்து தனது ‘அரை நாழிகை நேரம்’ நாவலின் துவக்கத்தில் முதியவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அழகாக விவரிக்கிறார்‘‘விலா எலும்புகளில் வலி எடுக்கவே குஞ்சு அச்சன் ஒருக்களித்துப் படுத்தார். அவரால் வலியைப் பொறுக்க முடியவில்லை. முற்றத்தில் சிறிது நேரம் நடந்தால் நல்லது என்று தோன்றியது. எழுந்து நடந்தால் படுக்க வேண்டும் போலிருக்கும், படுத்தாலோ எழுந்து நடக்கத் தோன்றும்.’’