

தமிழ் மொழி அறிஞர்கள் குறித்து இணையத்தில் தேடுவோருக்கு முனைவர் மு.இளங்கோவனின் வலைத்தளம் ஒரு கலங்கரை விளக்கம் எனலாம். அறிஞர்களின் வரலாற்றை நூல்களாகவும் காணொளிகளாகவும் ஆவணப்படங்களாகவும் பதிவுசெய்வதில் இவரிடம் உள்ள ஆராய்ச்சித் தேடலும் தொடர்ச்சியும் வியப்பை அளிப்பவை. தமது ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது, சிகாகோ தமிழ்ச் சங்க விருது, தமிழ்நாட்டு அரசின் விருதுகள், எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் ‘தமிழ் விக்கி பெரியசாமி தூரன்’ விருது ஆகியவற்றைப் பெற்றவர்; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் கடமையாகக் கொண்டுள்ளார்; தற்போது புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மு.இளங்கோவன் அளித்த நேர்காணலின் சுருக்கம்:
தமிழ் மொழி ஆளுமைகள் குறித்துப் பல ஆண்டுகளாக எழுதி வருகிறீர்கள். எது உங்களை இடைவிடாமல் இயங்க வைக்கிறது?