

விசாகப்பட்டினத்தில் 17 வயது நீட் பயிற்சி மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கில், கடந்த ஜூலை 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மிக முக்கியமான 15 வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளது.
அதில் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21இன்படி வாழ்க்கை, தனிமனிதச் சுதந்திரம் ஆகியவற்றில் மனநலமும் உள்ளடங்கும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, 100 மாணவர்களுக்கு மேல் கல்வி அல்லது பயிற்சிபெறும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.