

தூய்மைப் பணி பல்வேறு வகைப்படும். மக்கள் அதிகம் கூடுகின்ற பேருந்து நிலையங்கள், சந்தைகள், பூங்காக்கள், வீதிகள் போன்ற இடங்களில் தினசரிக் கழிவுகளை அகற்றுதல்; வீடுகள் / கடைகள் / அலுவலகங்களில் இருந்து குப்பைகளைச் சேகரித்து அகற்றுதல்; பண்டிகைகள், மாநாடுகள், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் குவியும் கழிவையும் வெள்ளம் முதலான பேரழிவுகளுக்குப் பிந்தைய கழிவுகளையும் அகற்றும் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் நடப்பவை.
இவை தவிர, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், திரை அரங்குகள் போன்றவற்றின் தூய்மைப் பராமரிப்பு, கட்டிடங்கள், தொழிற்சாலைகளின் தூய்மைப் பராமரிப்பு போன்றவை, அந்தந்தக் கட்டமைப்புகளின் கட்டுப்பாட்டில் நடப்பவை.