

‘டிரான்ஸ்ஃபார்மர்கள்’ எனப்படும் மாற்றிகளின் வருகை ஏஐ தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் விடை தந்தது. செய்யறிவு வசந்த காலத்தின் தொடக்கமாகவும் அது மாறியது. “கவின், 2017இல் டிரான்ஸ்ஃபார்மர் வந்த பிறகு, ஓர் அற்புதமான பரிசோதனை தொடங்கியது.
அப்போது ஓபன் ஏஐ (OpenAI) என்கிற நிறுவனம், ஜிபிடி (GPT) என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கியது. ஜிபிடி என்றால் Generative Pre-trained Transformer - அதாவது, உருவாக்கும் திறன் கொண்ட, முன்பே பயிற்சி பெற்ற மாற்றி!” “ஜிபிடி வந்தபோது இந்தப் பெயரே ஒரு குழப்பத்தையும் திகிலையும் உருவாக்கியதாகக் கேள்விப்பட்டேன், செய்மெய்.”