சிறப்புக் கட்டுரைகள்
சாதிப் பிடியிலிருந்து காதலுக்கு விடுதலை எப்போது?
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் நிலையில், சாதி ஆணவப் படுகொலை குற்றத்தைத் தடுத்திட தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பற்றி வலுவாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பான விவாதங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
சாதியும் குடும்பமும் ஆணாதிக்கமும் சொத்து உடைமையும் குற்றச்செயல்களின் பின்னணியில் இருப்பதை அண்மையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் மரணம் உணர்த்துகிறது. இந்நிலையில், ஆணவப் படுகொலைகளில் குடும்பங்கள், பெற்றோர்களின் பங்கு குறித்து நாம் பேச வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.
