சென்னைக்கு ஏன் தேவை புதிய விமான நிலையம்?

சென்னைக்கு ஏன் தேவை புதிய விமான நிலையம்?
Updated on
3 min read

உலகின் வான் பயணங்கள் இன்றைக்கு விரிவடைந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் புதிய முதலீடுகளை ஈர்க்க, வேலைவாய்ப்புகளை உருவாக்க, நவீனத்துவத்தின் உச்சத்தை எட்ட, வான் பாதைகளை அகலப்படுத்துகின்றன. விமான நிலையங்கள் என்பவை வெறும் பயண முனையங்கள் அல்ல; அவை ஒரு நாட்டின் பொருளாதார நரம்புகள், உலகளாவிய இணைப்பின் பாலங்கள்; எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் இடும் சக்தி மையங்கள்.

இந்தியப் பொருளாதாரத்தின் இதயமாகச் செயல்படும் சென்னையின் விமான நிலையம் எப்படி இருக்கிறது? இந்திய விமான நிலையங்​களின் எண்ணிக்கை, பயணிகள் - சரக்குப் போக்கு​வரத்து ஆகியவை கடந்த தசாப்​தத்தில் கணிசமாக அதிகரித்​துள்ளன. 2014இல் 74ஆக இருந்த விமான நிலையங்​களின் எண்ணிக்கை 2023இல் 148ஆக இரு மடங்கு ஆகி​யுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in