

‘கறையான்’ என்பது நாவலின் பெயர் மட்டுமில்லை. அது நகரவாழ்வின் அடையாளம். வங்காளத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியரான சீர்ஷேந்து முகோபாத்யாய எழுதிய கறையான் நாவலை சு. கிருஷ்ணமூர்த்தித் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
சீர்ஷேந்து முகோபாத்யாய சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவர் இந்த நாவலை எழுதிமுடித்துவிட்டு என்ன பெயர் வைப்பது எனத் தெரியாத குழப்பத்தில் இருந்திருக்கிறார். அப்போது அனுகுல் சந்திர தாகூரின் “சத்யானுசரன்” புத்தகத்தைக் கையில் எடுத்து, கண்களை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தைத் திறந்த போது கறையான் என்ற சொல் கண்ணில் பட்டிருக்கிறது. அதையே தலைப்பாக வைத்துவிட்டார்.