

போர்கள் மனிதகுலத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் அபாயகரமான ஆற்றல் கொண்டவை என்பதை வரலாறு நமக்கு இடைவிடாது போதித்துவருகிறது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 21ஆம் நூற்றாண்டில் போர் முறைகளும், அதன் தன்மையும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்தப் பின்புலத்தில், போர் குறித்த சமூக-அரசியல்-பொருளாதாரப் புரிதல் விரிவடைந்துவருகிறது. போர் ஏற்படுத்தும் விளைவுகளை அரசியல் பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி, சூழலியல் பரிமாணத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.