சிறப்புக் கட்டுரைகள்
ராஜேந்திரனைக் கொண்டாடும் வரலாற்றுத் தருணத்தில்...
ராஜேந்திர சோழன் ஆட்சியின் 13ஆம் ஆண்டின் மெய்க்கீர்த்திபடி, வரலாற்றைப் பின்வருமாறும் கூறலாம். கடற்கரை ஓரம்; வீரர்களின் சேனை கடல்போல் பெருகியிருந்தது. “குளிரைத் தாங்க முடியாதவர்கள், முதியவர்கள் வீட்டுக்குத் திரும்பலாம். இன்னும் சிறிது நேரத்தில், நம் நாவாய்களைக் கடலின் நடுவில் நிறுத்தப்போகிறோம்.”
ராஜேந்திரனின் சேனாதிபதி குரல் ஒலித்தது. கரையில் ராஜராஜ சோழனும் அவர் தனையன் ராஜேந்திரனும் நின்றனர். அருகில் சிறு குழு அவர்களின் உத்தரவுக்குக் காத்திருந்தது. மரமும், சுண்ணமும், செங்கல்லும் போதிய அளவில் உள்ளதால் பழையாறை அருகில் கற்றளிகளைக் கட்டுங்கள், இதனைக் கல்வெட்டில் பொறியுங்கள் என்று குழுவில் ஒருவரிடம் ராஜராஜன் உத்தரவிட்டார்.
