ஃபிடெல் காஸ்ட்ரோ நூற்றாண்டு | அமெரிக்கக் கண்டத்தின் அக்னிக் குஞ்சு

ஃபிடெல் காஸ்ட்ரோ நூற்றாண்டு | அமெரிக்கக் கண்டத்தின் அக்னிக் குஞ்சு
Updated on
3 min read

‘வரலாறு விடுதலை செய்த’ நாயகன் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 13) தொடங்குகிறது. உலகின் வல்லமைமிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் மூக்கு நுனியில் இருக்கும் சின்னஞ் சிறு நாடான கூபாவில், சர்வாதிகாரி பாடிஸ்தாவை விரட்டியடித்து, 1959 ஜனவரி 1 அன்று ஆட்சியைப் பிடித்து, அந்நாட்டின் வரலாற்றையே மாற்றி எழுதியவர் மாபெரும் வீரரான ஃபிடெல். தனது சம காலத்திய உலகத் தலைவர்களிலேயே மிகவும் இளமையானவராக, முற்றிலும் மாறுபட்டவராகத் திகழ்ந்தவர்.

சர்​வ​தேசத் தலைவர்: வாழ்நாள் முழுவதும் அமெரிக்க அரசுக்குச் சிம்ம சொப்பன​மாகத் திகழ்ந்த அவர் - ஐசனோவர், கென்னடி, ஜான்சன், நிக்சன், ஃபோர்ட், கார்ட்டர், ரீகன், புஷ் சீனியர், கிளிண்டன், புஷ் ஜூனியர் ஆகிய பத்து அமெரிக்க அதிபர்​களின் தூக்கத்தைக் கெடுத்​தவர்; இந்த அதிபர்கள் கூபாவின் மீது தொடுத்த அரசியல் – பொருளாதார நெருக்கடி அஸ்திரங்கள் ஒவ்வொன்​றையும் தவிடுபொடி ஆக்கி, கூபாவின் இறையாண்மையை நிலைநாட்​டியவர் எனவும் கூறலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in