

‘சத்தத்தை வைத்து ஒன்றின் முக்கியத்துவத்தை மதிப்பிட்டுவிடக் கூடாது’ - ‘குட் பை மிஸ்டர் சிப்ஸ்’ என்னும் புகழ்பெற்ற நூலில் இடம்பெற்றிருக்கும் அழகான வாசகம் (தமிழில் பேராசிரியர் ச.மாடசாமியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் ‘போயிட்டு வாங்க சார்’ என்னும் தலைப்பில் இப்புத்தகம் வெளியாகியிருக்கிறது!).
போர் நேரத்தில் குண்டுகளின் பெருத்த ஓசையினூடே நடக்கும் வகுப்பறையில் ஆசிரியர் சிப்ஸ் சொல்லும் வாக்கியம்தான் அது. ஒன்றின் குரல் உரத்துக் கேட்பதாலேயே, அது உண்மைத்துவம் நிரம்பியதாக ஆகிவிடாது. குறிப்பாக, அதிகாரத்தின் குரல் எப்போதும் மற்றவற்றை ஒடுக்கும் வண்ணம் பெருத்த ஓசையுடன்தான் ஒலிக்கும்.