

“ஆழ்கற்றல் என்றால் என்ன செய்மெய்?” என நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
“கவின், இதை நாம் ஏற்கெனவே ஓரளவு பார்த்துவிட்டோம். நினைவுபடுத்திப் பாருங்கள்... நம் மூளையில் நியூரான்கள் என்கிற நரம்பு செல்கள் இருக்கின்றன, அல்லவா? அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து வலைப்பின்னல்களை உருவாக்குகின்றன என்பதை மியூசியத்தில் பார்த்தோமே! மனித மூளையின் இயற்கையான முறையைக் காப்பியடித்துச் செயற்கையான முறையில் நாம் உருவாக்கும் முறைதான் இந்த ஆழ்கற்றல்.”